சாத்தான்குளம் வீரகுமார் பிள்ளை தெருவை சேர்ந்தவர் வேதநாயகம் மகன் செல்லையா (60). தொழிலாளி. இவர் நேற்று இரவு சாத்தான்குளம் கரையடி மாடசாமி கோயில் அருகே உள்ள பிள்ளையார் கோவில் முன்பு படுத்திருந்தார்.
காலையில் அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தபோது கழுத்து துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து சாத்தான்குளம் போலீசுக்கு அவர்கள் தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சாத்தான்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.