திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் குப்பநத்தம் சாலையில் உள்ள தளவாநாயக்கன் பேட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் ராஜா (.45) என்பவரை அவருக்கு சொந்தமான குடியிருப்பு வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் மர்மமான முறையில் கழுத்தில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை பரபரப்பை ஏற்படுத்தியது.













