அலர்ஜி மாத்திரை சாப்பிட்ட புதுமணப்பெண் பரிதாப பலி

0
1158


கோவை நீலிகோணம்பாளையம் தட்சன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் என் மகள் லாவண்யா (28). இவர் கோவையில் உள்ள அரசு வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஆகஸ்டு 20ஆம் தேதி திருமண தேதியாக நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மதியம் லாவண்யாவுக்கு கையில் ஏதோ பூச்சி கடித்தது போல அலர்ஜி ஏற்பட்டுள்ளது .இதனால் உடலில் தடிப்பு ஏற்பட்டுள்ளது. அவில் மாத்திரையை சாப்பிட்டால் அலர்ஜி சரியாகிவிடும் என்று நினைத்த லாவண்யா, ஐந்து அவில் மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார் . அளவுக்கதிகமாக மாத்திரை சாப்பிட்டதால் மயங்கி விழுந்தார். இதை பார்த்து பயந்து போன அவரது குடும்பத்தார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் லாவண்யா நேற்று இரவு பரிதாபமாக உயிர் இழந்தார் .

இதுகுறித்து அவரது தந்தை ராஜசேகரன் புகாரின் பேரில் சிங்காநல்லூர்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here