நானொரு சன்யாசி: அமெரிக்காவில் மோடி உருக்கம்

0
657

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் என் ஆர் ஜி கால்பந்து மைதானத்தில் ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் அந்நாட்டு அதிபர் டிரம்பும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப் ‘அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள். இந்திய சமுதாய மக்களுக்காக என் அரசு உழைக்கிறது.பயங்கரவாதிகளிடமிருந்து  பாதுகாக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படும் . என்பிஏ கூடைப்பந்து போட்டி இந்தியாவில் நடக்கும்.  போட்டியை காண  மும்பை வருவேன் இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் ‘என்றார்

‘இந்திய அமெரிக்க நட்பு இப்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது’ என்று முன்னுரைத்த மோடி, டிரம்ப் பேசிய  பின்பு தனது உரையைத் தொடங்கினார்.

அப்போது ‘நான் ஒரு சாமானியன், சன்னியாசி.130 கோடி மக்களின் கட்டளைக்கு ஏற்ப பணியாற்றி வருகிறேன். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் பெருமை. 100 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றிணைந்து நிற்கின்றன.

‘மோடி நலமா?’ ன்று கேட்கிறீர்கள். ,இந்தியர்கள் யாவரும் நலம்’ என்றவர்,  இந்தியாவின் வாக்காளர்கள் இணையசேவை ஆன்லைன் வரி செலுத்தும் முறை போன்ற திட்டங்களை விளக்கி பேசினார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த 370வது சட்டப்பிரிவை நீக்கியதை சுட்டிக் காட்டியவர், ஒரு டஜனுக்கும் மேலான பழைய சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஒரே சட்டம் என்பது நிலை நாட்டப்பட்டு இருக்கிறது. பெண்கள் தலித்துகளுக்கு மறுக்கப்பட்ட நீதி நாடாளுமன்றம் மூலம் கிடைத்துள்ளது. காஷ்மீர் மக்களுக்கும் இனி அனைத்து சலுகைகளும் கிடைக்கும். சில நாடுகள் தீவிரவாதிகளை பாதுகாக்கின்றன. அத்தகைய நாடுகளை உலகம் அறிந்துள்ளது. தீவிரவாதத்திற்கு ஆதரவான நாடுகளுக்கு எதிராக போராட வேண்டிய நேரம் இது’ என்றார்.

நிகழ்ச்சியின் இடையே மோடியும் டிரம்பும் மூன்று முறை கட்டித் தழுவிக் கொண்டனர். மோடியின் நீண்ட உரையை அமெரிக்க அதிபர் பொறுமையுடன் கேட்டார். அவர் முன்னிலையில் மறைமுகமாக பாகிஸ்தானை மோடி சாடினார். மோடியின் பேச்சில் பெரும்பகுதி தமது ஆட்சியை பற்றியதாகவே இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here