இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகருக்கு சென்றார். அவர் வருகைக்கு அங்கிருந்த தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து விளம்பரம் செய்திருந்தனர். மேலும், அவரது வாகனத்தை மறிக்க ஏற்பாடு செய்தனர். இது போலீசாரால் தடுக்கப்பட்டது.
இந்நிலையில், அவர் தங்கியிருந்த விடுதியை இன்று அதிகாலையிலேயே சூழ்ந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.