பேனர் விழுந்து பொறியியல் பட்டதாரிப்பெண் பலியானதும், நீதிமன்றம் வெகுண்டெழுந்தது. அதன் எச்சரிப்பின் சத்தத்தால் அதிகாரிகள் விழித்துக்கோண்டனர்.
அரசியல் கட்சித்தலைவர்கள் புது ஞானம் பெற்று, பேனர் இல்லாத விழாக்கள் காண புது சபதம் எடுத்தனர்.
அருப்புக்கோட்டையில் கூடுறவு பல்க் தொடக்கவிழாவுக்கு சென்ற அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜி ஆகியோர், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளை அகற்றினால்தான் விழாவில் பங்கேற்போம் எனக்கூற, வருவாய் துறையினர் அவற்றை அகற்றினர்.
விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி தேமுதிக அலுவலகம் அருகே சலை நடுவே சென்டர் மீடியனில் இருந்த கொடிகளை அவரது கட்சியினர் அகற்றினர்.
புதுவையில் மோடி பிறந்த நாளுக்கு வைத்திருந்த பேனர்களை எம்.எல்.ஏ. சாமிநாதன் அகற்றினார். அடுத்து வரவிருக்கும் திமுக முப்பெரும் விழாவுக்கு அதிக பேனர் இருக்க கூடாது என முக ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
அரசியல் கட்சியினர் திருந்தினால் நாடு திருந்துவது உறுதி.