சென்னை வேளச்சேரி பேபி நகரில் போதையில் சிக்கிய ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது அவரிடம் ஒரு கிராம் விலை உயர்ந்த மெத்தம் பேட்டமைன் போதை பொருள் இருந்தது.

அவரை பிடித்து விசாரித்த வேளச்சேரி போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் போதை பொருள் விற்கும் கும்பலை சேர்ந்த அப்துல் கலிக்(48), சேட்டு முகமது(47), பசீர் அகமது(47), ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1401 கிராம் மெத்தம் கேட்டமைன் என்கிற விலை உயர்ந்த போதை பொருளை பறிமுதல் செய்தனர். இதன் விலை சுமார் ஒரு கோடி என போலீசார் தெரிவித்தான்ர். .
போதைப்பொருள் விற்பனை கும்பலிடமிருந்து 2 கார், 2 இருசக்கர வாகனம், 7 செல்போன், ஆகியவற்றையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.