நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி ஊராட்சியில் ஒன்பதாவது வார்டுக்கு ஆறு பேர் போட்டியிட்டனர். இதில் இதில் ஜெபராஜ், உமாபதி,ராஜ்குமார் ஆகியோர் தலா 26 வாக்குகள் எடுத்திருந்தனர். இதையடுத்து சீட்டுக் குலுக்கிப் போட்டு, அதில் உமாபதி பெயர் வந்தது. எனவே அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
இந்த ஒரே வாக்கு பிரச்சனைக்கு முன்னதாக உருவாக்கு பிரச்சினை எழுந்தது. அதாவது, பதிவான மொத்த வாக்குகள் 133.அதை எண்ண கொண்டுவந்தபோது இருந்தது 132. எண்ணி முடித்து கணக்கு பார்த்தபோது வந்தது 131. ஆக ஒரு வாக்கு குளறுபடி தொடர்ந்தாலும் மூன்று வேட்பாளர்களும் பெருந்தன்மையாக ஒப்புக்கொண்டதால் பிரச்சினையின்றி முடிவு அறிவிக்கப்பட்டது.







