பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

0
209

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிஎஸ்என்எல் முகவர்களாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக பிஎஸ்என்எல் பொது மேலாளர் கிருஷ்ணகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் “தற்பொழுது பிஎஸ்என்எல் அனைத்து வாடிக்கையாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிஎஸ்என்எல் முகவர்களாக பணிபுரிய தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டத்தில் உள்ளஇளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.


குறிப்பாக கேமரா நெட்வொர்க் மற்றும் கம்ப்யூட்டர் நெட்வொர்க் வேலை செய்கிறவர்களுக்கு இது ஓர் சிறப்பான வாய்ப்பாகும். வளர்ந்து வரும் பிஎஸ்என்எல் பாரத் பைபர் இணைப்புகளை பிஎஸ்என்எல் க்கு பெற்று தருவதன் மூலம் 75% வரை கமிஷன் தொகையாக பெறலாம்.. உதாரணமாக ரூ.1000 க்கு மாத வாடகை இணைப்பு பெற்று தந்தால் ரூ 750 கமிஷன் தொகையாக பெற முடியும். இதற்கான கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். 
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இளைஞர்கள் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ பணியாற்றலாம்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு விண்ணப்பிக்க மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரியான நேதாஜி-9488894188, திருநெல்வேலி மற்றும் தென்காசிக்கு மாவட்டத்திற்கு விண்ணப்பிக்க மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரியான லால் பகதூர் சாஸ்திரி – 9486103405 ஆகியோரை தொடர்பு கொள்ளவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here