இந்தியா _ நேபாளம் இடையே 69 கி.மீ. தூர எரிபொருள் குழாய் திட்டத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கிவைத்தார்.
ரூ.324 கோடியில் நிறைவேற்றப்பட்ட இத்திட்டம் 1996ல் முன்மொழியப்பட்டது. 2014ல் காட்மண்டுக்கு சென்ற மோடி அதை தொடங்க ஏற்பாடு செய்தார்.
இந்தியாவில் பீகார் மாநிலம் சம்பரனிலிருந்து நேபாளம் பாரா மாநிலம் அம்லேக் கஞ்ச் வரை குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இது தெற்காசியாவில் நிறைவேற்றப்பட்ட முதல் பெருந்திட்டமாகிறது.
இந்திய பிரதமருடன் நேபாள பிரதமர் ஷர்மா ஒலியும் இந்த நிகழ்ச்சியில் காணொளியில் பங்கேற்றார்.