சிகிச்சைக்கு வந்த மூதாட்டியை காக்க வைத்ததாக திருப்பரங்குன்றம் தலைமை மருத்துவரிடம் விசாரணை

0
1068

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த தனது தாயை இரண்டு மணி நேரத்திற்கும் காக்க வைத்ததாக சுந்தர்ராஜன் என்பவர் திருப்பரங்குன்றம் தலைமை மருத்துவர் செல்வராஜ் மீது மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறையினரிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில்., புகாரின் அடிப்படையில், மாவட்ட மருத்துவ ஊரக நலத்துறை இணை இயக்குனர் வெங்கடாச்சலம் தலைமையில் 5க்கும் மேற்பட்ட சுகாதாரத்துரையினர்
இரண்டு மணி நேரத்திற்க்கும் மேலாக தலைமை மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையை முடித்து விட்டு, செய்தியாளர்களிடம் இணை இயக்குனர் வெங்கடாச்சலம்,’

புகார் அடிப்படையில் அவரிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் ,ஆவணங்களை சரிபார்த்து வருவதாகவும்,விசாரணை முழுமையாக முடித்த பின்னரே எதுவும் தெரிவிக்க முடியும் என்றார.

இதற்கிடையே, அப்பகுதி மக்கள் மருத்துவரை பற்றி தவறான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here