‘அவுட்டு காய்’ வைத்து நாயைக் கொன்றவர்கள் கைது

0
1679

காட்டுப்பன்றி, யானை போன்றவற்றை விரட்டுவதற்காகத் தர்ப்பூசணி, பலா போன்ற பெரிய பழங்களில் நாட்டு வெடி மறைத்து வைக்கப்படுகிறது. இதற்குப் பெயர் ‘அவுட்டுக் காய்’. உயிரினம் அதைக் கடிக்கும்போது, வெடித்து உயிரைப் பறித்துவிடும். அப்படி ஒரு அவுட்டு காயால் நாயை கொண்டவர்கள் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை, பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் இன்று காலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது
பூச்சியூர் அடுதத கதிர் நாயக்கன்பாளையம் ரங்கசாமி என்பவர் நிலத்தில் வெடிச்சத்தம் கேட்டது. தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் அவுட்டுக்காய் வெடித்து தலை சிதறி கிடந்த நாயை ஒன்றை கண்டனர்.

அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சென்ற இரண்டு பேரை பிடித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் காட்டு பன்றிகளை வேட்டையாட அவுட்டுக்காய் வைத்து, அதில் நாய் இறந்தது தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து ஐந்து அவுட்டுக்காய்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக வெடி வைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் முருகேசன் மீது துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here