காஞ்சிபுரம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், திருட்டு, வழிப்பறி குற்றங்கள் தொடர்ந்து நடப்பதால், பெண்கள், பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர் காஞ்சிபுரம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், சமீபகாலமாக, திருட்டு, வழிப்பறி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான சாலையில் ஆட்டோவில் பெண்கள் சென்று கொண்டிருந்த பொழுது ஆட்டோவை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் ஆட்டோவில் அமர்ந்திருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறிப்பதற்கு முயற்சி மேற்கொண்டனர்

ஆனால் சுதாரித்துக்கொண்ட அப்பெண்மணி தங்க செயினை கையில் இறுக்கிப் பிடித்ததால் செயின் பறிபோகவில்லை இதேபோல் இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளை சமீபகாலமாக
போலீசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

இதன் காரணமாகவே, வழிப்பறி மற்றும் வீடு புகுந்து நடந்திடும் கொள்ளை சம்பங்களும் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள், பெண்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்.மேலும், புகார் காரணமாக அலைக்கழிக்கப்படுவதால், போலீசிடம் புகார் அளிக்கவும், பொதுமக்கள் தயங்குகின்றனர்.எனவே, பொதுமக்களை அச்சத்தை போக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா அமைத்து, குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.













