தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி புறவழிச்சாலை பகுதியில் பைக்கில் வந்த பிரபாகர் (30) என்பவரிடம் கடந்த ஜூலை 5ஆம் தேதி 4 பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டது. இது குறித்து ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்து வந்த பூஜை மணி என்பவரை இன்று போலீசார் கைது செய்தனர்.









