கவர்னருக்கு தான் ரோடா? குமுறித் தள்ளும் தேமுதிக பிரமுகர்

0
851

இந்தியா முழுவதும் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் நூறு மாநகரங்கள் பெருஞ்செலவில் புனரமைக்க திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது . அதில் நெல்லை தூத்துக்குடி மாநகரங்களிலும் அடக்கம்.

இரு மாநகரங்களையும் சீரமைக்கிறோம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் செலவழித்து அடித்தட்டு வசதிகள் எதுவும் மேம்படவில்லை. குறிப்பாக சாலை, போக்குவரத்து, பாதாள சாக்கடை, குடிநீர் வசதி எதுவுமே சிறப்பாக செய்யப்படவில்லை.

குறிப்பாக இரு மாநகரங்களிலும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. நெல்லையில் முக்கிய சாலைகளின் நடுவிலே கான்கிரீட் தடுப்பு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. குண்டு குழி, செய்யப்படவில்லை. கோடிக்கணக்கில் செலவழித்து சீர்மிகு திட்டம் செயல்படுத்தியும் சாலையை பராமரிக்காத நிலையில், நாளை கவர்னர் வருகையை முன்னிட்டு குறிப்பிட்ட சாலை அவசரமாக செப்பனிடப்பட்டது.

இது குறித்து தேமுதிக மாநகர இளைஞரணி துணை செயலாளர் மகாராசன் குமுறித் தள்ளியதோடு சமூக ஊடகங்களிலும் பரப்பியுள்ளார். அந்த காணொளி கீழே :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here