காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் உள்ள அனந்த புஸ்கரணியில் (கோயில் குளம்) வைக்கப்பட்டிருந்த அத்தி வரதர் பெருமாள் சிலையை சுமார் 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியே எடுத்து பூஜைகள் செய்து பக்தர்கள் தரிசனம் செய்ய காட்சிக்கு வைப்பது வழக்கமாக உள்ளது. ஆகஸ்ட் 17ம் தேதி ஆகம விதிப்படி பூஜைகள் செய்து மீண்டும் குளத்தில் வைக்கப் பட உள்ளது.
பல அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் அத்திவரதரை தரிசனம் செய்த நிலையில், நள்ளிரவில் ரஜினிகாந்த் அத்தி வரதரை தரிசனம் செய்தார். அவருடன் அவரது மனைவி லதாவும் உடன் இருந்தார்.
முன்னதாக ஜூலை 23ம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா தனது மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் பேரக் குழந்தைகளுடன் அத்திவரதரை வழிபட வந்த போது ஆன்மிகத்தில் பெரியளவு நாட்டம் உள்ள ரஜினிகாந்த் ஏன் வரவில்லை என கேள்வி எழுந்தது.















