விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபயிற்ச்சிக்கு சென்றவரை கீழே தள்ளிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிய குற்றவாளிகளை ஒரு மணி நேரத்தில் கைது செய்த போலீசார்
அருப்புக்கோட்டை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கலைமணி(63) ஓய்வு பெற்ற வங்கி பணியாளரான கலைமணி இன்று வழக்கம் போல் காலை புறழிச்சாலையில் நடைபயிற்ச்சியில் ஈடுபட்டுள்ளார் அப்போது புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருக்கும் போது பின்னாள் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மூன்று மர்மநபர்கள் கலைமணியை கீழே தள்ளிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர்

உடனடியாக சுதாரித்து எழுந்த கலைமணி நகர் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு செயின் பறிப்பு குற்றவாளிகள் தப்பி சென்ற திசையில் சோதனை சாவடிகளை உஷார் படுத்தினர் குற்றவாளிகள் தாங்கள் வந்த இரண்டு இருசக்கர வாகனங்களில் ஒன்றை ராமனுஜபுரம் அருகே நிறுத்திவிட்டு ஒரே வாகனத்தில் மதுரை நோக்கி தப்பிச்சென்றுகொண்டிருந்தனர்

அப்போது ஆவியூர் சோதனை சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருப்பதை கண்டு நிற்காமல் தப்பி ஓட முயற்ச்சித்தினர் உடனடியாக சுதாரித்த போலீசார் அவர்களை மடக்கி பிடிக்கி முயன்ற போது இரு சக்கரவாகனத்தை கீழே போட்டு விட்டு தப்பி ஓட முயற்சித்தவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்
அவர்கள் மூவரையும் நகர் காவல்நிலையம் கொண்டு விசாரணை நடத்தியதில் அவர்கள் மதுரையை சேர்ந்த செல்லமணி, பாலாஜி மற்றும் திணேஷ்வரன் என்பதும் சிவகாசி கோவில்பட்டி மதுரை உள்ளிட்ட பல இடங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது மேலும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு புதிய பல்சர் வாகனங்களையும் நகையையும் பறிமுதல் செய்த போலீசார் வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய பல்சர் இருசக்கர வாகனத்தை நேற்றுதான் மதுரையில் திருடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது