யூ டியூபர் மதனின் இழிசெயலை அடித்துப்பேசி மறுக்கும் மனைவி

0
748

’பாவிகள் உலகமடா பரந்தாமா’ என்று பழைய படம் ஒன்றில் வில்லன் கேரக்டர் வசனம் பேசும். தற்போது மீடியா என்னும் ஊடக வளர்ச்சியால் அது உறுதிப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு பேச வாய்ப்பளிப்பது அவசியம்தான். ஆனால், அதற்கான கட்டம் இருக்கிறது. பொள்ளாச்சி பாலியல் கொடூரன் கூட தான் உத்தமன் என்று ஊரறிய சொல்ல ஊடகங்கள் உதவிகரமாக இருந்தன.

அதைப்போலவே, ஆபாசம் மூலம் பணம் பார்த்த மதன் மனைவி கர்ப்பிணி என்பதால் கருணை அடிப்படையில் ஜாமீன் பெற்று, இப்போது தன்னையும் தனது கணவனான மதனையும் நியாயப்படுத்தி வருகிறார். அவரது குரல் சித்தரிக்கப்பட்டது, 4 பேர் டிரிக்கர் செய்து வெளியிட்டது என்கிறார்.

அதுமட்டுமல்ல, தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் கூறாமல், ‘ புரூஃப் பண்ணுங்க, ஃபுரூப் பண்ணுங்க’ என்று பத்திரிகையாளர்களை கேட்கிறார். ’நீ செய்த குற்றத்தை இல்லை என்று நாங்கள் நிரூபிக்க வேண்டுமா? ‘ என்ப்று எவரும் கேட்கவில்லை.

அதுமட்டுமல்ல, மதனின் யூ டியூப் நடவடிக்கையோடு தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்கிறார். ஆனால், தனது வங்கிக்கணக்கு பணம் பெறப் பயன்படுத்தப்பட்டது என்கிறார். இதையும் எடுத்துப்பேச ஊடகக்காரர்கள் முன்வரவில்லை.

யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அந்த பேச்சையெல்லாம் கேட்டுவிட்டு வந்து வாதிடும்படி முன்ஜாமீன் வழக்கில் ஆஜரான வக்கீலுக்கு அறிவுறுத்திய நிலையில் இந்தப் பெண் கொஞ்சமும் வெட்கமின்றி இப்படி பேசுகிறார்.

கழிசடைகளான பெரும்பாவிகள் கூட , காசு செலவழித்து பிரஸ் மீட் வைத்து புனிதர்களாகலாம் போலும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here