மேகதாது திட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை: எடியூரப்பா

0
508

காவிரிக்கும், காவிரியின் துணை நதிகளுக்கும் குறுக்கே பல்வேறு அணைகள் கட்டி, தமிழ்நாட்டுக்கு நீர் வராதவாறு ஏற்கனவே கர்நாடக அரசு கெடுத்து வைத்துள்ளது, இந்நிலையில், மீண்டும் காவிரி செறிவாக ஓடும் குறுகிய பகுதியான மேக்கே தாட்டுவில் அணைகட்டி நீரை தடுக்க முயல்கிறது.

2015ல் 25 கோடி ரூபாய் ஒதுக்கி அது தயாரித்த திட்ட அறிக்கைக்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஒன்றிய அரசும் 2018ல் அனுமதி அளித்துவிட்டது. இந்நிலையில், திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு முனைப்பாக உள்ளது. ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராமல் இழுத்தடிக்கும் நிலையில், இந்த அணையும்கட்டப்பட்டால் சிறுது கூட நீர் வராது என்ற அச்சம் தமிழ்நாட்டில் உள்ளது.

இதுகுறித்து ஒன்றிய அமைச்சரை சந்தித்து துரைமுருகன் தமிழ்நாட்டின் நிலையை தெரிவித்துள்ளார். இதை கர்நாடக ஆளும், எதிர்கட்சிகள் சட்டையே செய்யவில்லை. கர்நாகட காங்கிரஸ் தலைவர் சிவகுமார், ‘ காவிரி குறுக்கே அணைகட்ட தமிழ்நாட்டில் கேட்க வேண்டிய அவசியமே இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மேகதாது அணை திட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை எனதிட்டமட்டமாக கூறியுள்ளார். ஒன்றிய அரசு மெளனம் காப்பதால் இரு மாநிலங்களிடையே பதற்றம் நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here