விருதுநகர் ரியல் எஸ்டேட் முகவர் நெல்லையில் கொலை

0
1223

நெல்லை சந்திப்பு பாபுஜி நகர் அருகே முட்புதரில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவருடைய உடல் காயங்களுடன் கிடந்ததை பார்த்த சிலர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

அதையடுத்து துணை கமிஷனர் சீதா, உதவி கமிஷனர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் போலீசார் நிகழ்விடத்தை ஆய்வு செய்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடந்தது.

விசாரணையில், இறந்து கிடந்தவர் விருதுநகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவர் காளிராஜ் என்பது தெரிந்தது. நில விற்பனை தொடர்பாக சிலர் நெல்லையில் இருந்து அவரை அழைத்துள்ளனர். அவர் காரில் வந்துள்ளார். அவரிடம் இந்த பகுதியை காட்டி பேசியபோது தகராறு ஏற்பட்டு, அவரை தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது.

போலீசார் அவரது உடலை பரிசோதனைக்கு அனுப்பி விட்டு, கொலையாளிகள் பற்றிய விசாரணையில் இறங்கியுள்ளனர்.

மாநகர போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் இருந்து சில மீட்டர் தொலைவிலேயே கொலை நடந்துள்ளது அப்பகுதி மக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here