நெல்லை பேட்டையில் பெயிண்டருக்கு வெட்டு

0
582

நெல்லை பேட்டை சாஸ்திரி நகரை சேர்ந்தவர் முத்துசாமி மகன் கணேசன்(வயது 32), பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்தவர் காதர்பாட்ஷா(28). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். காதர் பாட்ஷா கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் பைக்கில் அதிவேகமாக சென்று வந்துள்ளார்.

இதனை கணேசன் கண்டித்துள்ளார். சம்பவத்தன்றும் காதர் பாட்ஷா தனது பைக்கில் வேகமாக சென்று வந்துள்ளார். கணேசன் அதனை கண்டித்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே காதர் பாட்ஷா தான் வைத்திருந்த அரிவாளால் கணேசனை சராமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here