சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பகுதியில் கல்குவாரிகளை எதிர்த்து பொதுமக்கள் போராடி வருகின்றனர் புதிய குவாரி இயங்கவும், பழைய குவாரிகளில் அளவுக்கு அதிகமான ஆழத்தில் கற்களை எடுக்கவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதனால் அருகில் உள்ள ஊர்களில் வீடுகளில் விரிசல் விழுவதாகவும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும் கண்டிக்கின்றனர்.
இந்நிலையில், குவாரிகளில் இருந்து இன்று இரவு அனுமதி இன்றியும் அளவுக்கு அதிகமாகவும் கற்களை ஏற்றி வந்த நான்கு லாரிகளை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து கிராம நிர்வாக அதிகாரி மற்றும் காவலர்கள் வந்து லாரிகளை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். வழக்குப்பதிவு செய்வதாகவும் மக்களிடம் உறுதியளித்தனர்.








