காட்டுப்பன்றி வேட்டையாடிய 4 பேர் கைது

0
1003


கோவை மருதமலை அடிவாரம் தடாகம் பகுதியில் காப்பு காட்டிற்கு வெளியே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஐஓபி காலனி மீனாட்சி நகர் பகுதியில் நேற்று இரவு டாடா இண்டிகா காரில் சந்தேகத்திற்கிடமான வகையில் நான்கு பேர் சென்று கொண்டிருந்தனர் . அவர்களை விசாரித்த பொழுது அவர்களிடம் ஒற்றை குழல் துப்பாக்கி ஒன்று இருந்தது தெரியவந்தது .

அவர்கள் அதே பகுதியில் காட்டுப்பன்றி சுட்டுக் கொன்று விட்டதாகவும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் தப்பிச் செல்ல முயன்றவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் அவர்களை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது பிடிபட்ட நபர்கள் கோவை முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த என்பவரின் மகன் ராஜ்குமார்( 43), சின்னதடாகம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் சசிகுமார் (47), பண்ணிமடை ராமர் கோவில் வீதியைச் சேர்ந்த கோபாலகருஷ்ணன் என்பவரின் மகன் சம்பத்குமார் (39 )மற்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அத்தம் பாளையம் பகுதியைச் சேர்ந்த செங்கோட கவுண்டர் என்பவரின் மகன் தேவராஜ் (55) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here