சிறுமியை பாலியல் கொடுமை செய்த சிற்றப்பன் கைது

0
545

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமி(14) தந்தையை இரண்டு ஆண்டுகளுக்கு முன் இழந்து தனது தாயாருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கிறார். கடந்த ஒரு வருடமாக பள்ளிகள் இயங்காததால் சிறுமி வீட்டில் இருந்து வந்தார்.

தாயார் வேலை செய்யும் தீப்பெட்டி ஆலைக்குச் சென்றவுடன், தாயாரின் தங்கை கணவன் ராமர் (28) என்பவன் சிறுமியின் வீட்டிற்கு வந்து, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளான். சிறுமிக்கு சித்தப்பா முறை உறவு என்பதால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படவி்ல்லை. இதனை சாதகமாக பயன்படுத்திய கொடூரன் சிறுமியை தொடர்ந்து பாலியல் வன் கொடுமை செய்துள்ளான்.

சில மாதங்களுக்கு முன் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமான விசயம் தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு, திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

சிறுமியின் நிலை குறித்து சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மகளிர் போலீசார் மருத்துவமனைக்குச் சென்று சிறுமியிடம் ரகசிய விசாரணை நடத்தினர். தனக்கு நடந்த கொடூரம் குறித்து, போலீசாரிடம் சிறுமி வாக்குமூலம் கொடுத்தார். இதனடிப்படையில் வழக்குபதிவு செய்த அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், சிறுமியை மிரட்டி வன்கொடுமை செய்த ராமரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here