மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி மற்றும் தம்பி ஆகிய 3 பேர் வெற்றி பெற்று உள்ளனர்.
அதிமுகவை சேர்ந்த அசோக்குமார் பதினெட்டாம் வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரது மனைவி சூர்யா 13 ஆம் வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதேபோல 4 வது வார்டில் போட்டியிட்ட அசோக்குமாரின் தம்பி இளங்கோவனும் வெற்றி பெற்றுள்ளார். இவர்கள் மூவரும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இவரது தந்தை சோணை 1வது வார்டில் போட்டியிட்டு 29 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். இவரும் வெற்றி பெற்றிருந்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.