அரசியலை கலக்கிய ஆன்மீகவாதி – பேராயர் எஸ்ரா சற்குணம் மறைவு

0
1122

இ எஸ் ஐ எனப்படும் இவாஞ்சலிக்கல் சர்ச் ஆஃப் இந்தியாவின் ( இந்திய சுவிசேஷ திருச்சபை ) ஸ்தாபகர்களுள் ஒருவரும், அந்த சபையின் முதல் பிஷப்பாகவும் மாடரேட்டராகவும் திகழ்ந்த எஸ்ரா சற்குணம் (90) இன்று மறைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பண்ணை விளையைச் சேர்ந்தவர் எஸ்ரா சற்குணம். சென்னையில் உள்ள ஓ எம் என்ற சுவிசேஷ கல்வி நிறுவனத்தில் கற்றுத் தேர்ந்து சேகர குரு ஆனார். சி எஸ் ஐ எனப்படும் தென்னிந்திய திருச்சபையின் ஞானஸ்நான முறைகள் போன்றவற்றில் மாறுபாடு கொண்ட சில குருவானவர்களுடன் சேர்ந்து இ எஸ் ஐ யை நிறுவினார்.

இவரது மனைவி மங்களமும் பண்ணை விளையைச் சேர்ந்தவர். இவர்களுக்கு இரண்டு பெண் மக்கள். ஒருவர் குருவாக ஆன்மீக பணி செய்கிறார். மற்றொருவர் வெளிநாட்டில் இருக்கிறார்.

தனது அரசியல் ஈடுபாட்டிற்காக எஸ் ரா சற்குணம் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். திமுக மாநாடுகளில் வெளிப்படையாக கலந்து கொண்டவர் திமுகவிற்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைப்பதற்கு காரணியாக இருந்தவர். இறுதி வரை திமுகவுக்கும் கருணாநிதிக்கும் விசுவாசமாக இருந்தார். ஆனாலும் தனது திருச்சபை நடவடிக்கைகளில் தீவிரமாக இருந்ததால் ‘தந்தை பேராயர்’ என்று சிறப்பிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here