சென்னை தூரதர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி திடீரென்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் ஐஐடி விழாவில் கலந்துகொண்ட நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
பிரசார் பாரதி தலைமை அலுவலர் சஷி ஷேகர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.














