பேஸ்டில் 8 கிலோ தங்கம் – 6 பேர் கைது

0
1764

சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் இன்று அதிகாலை 4-30 மணி அளவில் கோவை பீளமேடு விமான நிலையத்துக்கு வந்தது. அதில் இருந்து இறங்கி வந்த 6பேரிடம் குடியுரிமை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அவர்கள் பேஸ்டில் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப் பட்டது.இதையடுத்து 6 பேரும் கோவை சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து 7கிலோ 908 கிராம் தங்கத்தைஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இதை கடத்தி வந்த ஆறுமுகம், ஹாஜி அப்துல் ஹமீது, மாதவன், சுலைமான் ,ராஜேந்திரன், டெனி இப்ராஹீம் ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here