நகரங்கள் தோறும் சென்று கார் திருடியவர் கோவையில் கைது

0
726


கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இருந்தாலும் அடிக்கடி பைக்குகள், நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களின் செல்போன்கள் ,பொருட்கள் திருடு போ வது வழக்கம்.

இதுகுறித்து ரேஸ் கோர்ஸ் போலிசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளியின் உறவினர் ஒருவரின் கார் திருட்டு போனதாக புகார் வந்தது.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ரேஸ் கோர்ஸ் போலிசார் கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தியிருந்த மாருதி 800 காரை திருடிச் சென்ற நபரை கைது செய்தனர்.

பிடிபட்ட நபர் திருச்சி மாவட்டம் மனச்சநல்லூர் பகுதியை சேர்ந்த குழந்தைவேல் என்பவரின் மகன் ராஜா (எ) ஆரோக்கிய சகாய தர்மராஜ் (56 ) என்பது தெரிய வந்தது.

இவர் மீது சென்னை, திருப்பூர், சிவகங்கை ,கோவை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு இரு சக்கர வாகனம் திருடிய வழக்குகள் உள்ளது.

அவரிடமிருந்து இருசக்கர வாகனங்கள், 2 ராயல் என்ஃபீல்ட் புல்லட் , இரண்டு கார்கள் , 2 பேஷன் ப்ரோ ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here