தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில் சிவப்பு சாத்தியானது 30-ம் தேதியும், பச்சை சாத்தி 31-ம் தேதியும், திருத்தேர் வழிபாடு செப்டம்பர் மாதம் 2-ம் தேதியும் நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.







