கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பைக்கில் 2 குழந்தைகளுடன் தம்பதியர் பயணித்தனர். வழியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், காவலர் சார்லஸ் ஆகியோர் வாகனத்தை மட்டும் நிறுத்தி பைக்கில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் எனத்தடுத்தனர்.
ஓடுநர் உரிமம். வாகனத்தின் ஆர்சி, இன்சூரன்ஸ் ஆவண நகல்களை கொடுத்தபின்னும், ‘ ஆவணங்களின் ஒரிஜினல் வேண்டும்’ என விடாப்பிடியாய் நிறுத்திவைத்தனர். அதிலும், உதவி ஆய்வாளர் அந்தஸ்துக்கு குறையாதவர்களே விசாரிக்கவேண்டும் என்ற நிலையில் காவலர் சார்லஸ் கடுமையாக சட்டம் பேசி குழந்தைகளை கதறவைத்தார். இதை அவ்வழியாக சென்றவர்கள் காணொளியாக்கி சமூக வலைத்தளத்தில் பரவச்செய்தனர்.
இதனால் விழித்துக்கொண்ட மாவட்ட காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், காவலர் சார்லஸ் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.














