மதுரையில் நேற்று முன்தினம் 9 பேர், நேற்று 12 பேர் என அடுத்தடுத்து கொரோனா மரணங்கள் அதிகரித்து வருகிறது.
நேற்று 70 பேர் புதிய தொற்றால் பாதிக்கப்பட்டனர். 58 பேர் குணமடைந்தனர். இதுவரை 72 ஆயிரத்து 211 பேர் பாதிக்கப்பட்டதில் 70 ஆயிரத்து 479 பேர் குணமடைந்தனர்.1105 பேர் இறந்தனர். 627 பேர் சிகிச்சையில் உள்ளனர். 367 பேர் ஆக்சிஜன் வார்டிலும் 182 பேர் சாதாரண வார்டிலும் 128 பேர் ஐ.சி.யு.,விலும் 90 பேர் கோவிட் கேர் சென்டரிலும் சிகிச்சை பெறுகின்றனர்.
ஜூன் 28ல் 13 ஆயிரத்து 791 பேருக்கும் இதுவரை 8 லட்சத்து 7ஆயிரத்து 403 பேருக்கும் சளி பரிசோதனை செய்யப்பட்டது. ஜூன் 28ல் 5575 பேருக்கும் இதுவரை 5 லட்சத்து 59 ஆயிரத்து 726 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரியில் 290, அரசு மருத்துவமனையில் 60, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2970 என மொத்தம் 3200 டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது. மாவட்ட சுகாதார கிடங்கில் தடுப்பூசி இருப்பு இல்லை.













