செக்ஸ் வீடியோ எடுத்து மாட்டிய ஷில்பா ஷெட்டி கணவர்: பின்னணி பிசினஸ் ரகசியம் அம்பலம்

0
3572

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பாஷெட்டியின் கணவர் அவரது உதவியாளர் ரியான் தார்ப் ஆகியோர் ஆபாச படம் எடுத்ததாக கைது செய்யப்பட்டனர். இருவரிடமும் நடத்திய விசாரணையிலும், ராஜ்குந்த்ரா மறைமுக பார்ட்னராக இருந்த கென்ரின் நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் குழு உரையாடலை கவனித்ததிலும் இவர்கள் ஆபாசத் தொழிலை புத்திசாலித்தனமாக செய்தது தெரியவந்தது.

இந்தியாவில் ஆபாச வீடியோ எடுத்து வெளியிடுவதில் சிரமம் இருந்ததால், இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற தனது உறவினரான பிரதீப் பட்சி மூலம் கென்ரின் என்ற வீடியோ தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் ராஜ்குந்த்ரா. பாலிவுட்டில் வாய்ப்பு தேடி வரும் இளம்பெண்களையும், புதுமுகங்களையும் பண ஆசை காட்டி ஆபாச வீடியோ படங்களீல் நடிக்கவைத்து இங்கிலாந்துக்கு அனுப்பி, கென்ரான் நிறுவனத்தில் எடிட் செய்துள்ளார்.

மேலும், ஆபாச வீடியோ வெளியிடுவதற்காகவே ’ஹாட் ஷாட்’ என்ற செயலியையும் உருவாக்கியுள்ளார். இதன்மூலம் தினமும் இலட்சக்கணக்கில் கட்டணமாக பெற்று ஆபாச வியாபாரம் செய்துள்ளார்.

செகானா வசிஷ்ட் என்ற புதுமுகத்தை நடிக்கவைத்து ஏஜெண்டுகளுக்கு பண விநியோகம் செய்த நிலையில் கைதாகியுள்ள ராஜ்குந்த்ரா, அவரது உதவியாளர் ரியான் தார்ப் ஆகியோரை 23ஆம்தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ’ஹாட் ஷாட்’ செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here