பனைவிளை முத்தாரம்மன் கோவில் ஆவணி திருவிழா

0
340

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பனைவிளை கிராமத்தில் ஸ்ரீ முத்தாரம்மன் ஆலயத்தில் ஆவணி கொடை விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் இந்த கோயில் கொடை விழா மூன்று நாள் நடைபெற்றது. கோவில் கொடை விழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்டது. திருவிழாவில் காலையும் மாலையும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் இதில் அப்பகுதி கிராம பெண்கள் கலந்து கொண்டு 201 திருவிளக்கு பூஜை நடைபெற்றது .திருவிளக்கு பூஜையை முன்னிட்டு ஆலயத்தில் முன்பு பெண்கள் வரிசையாக அமர்ந்து மந்திரங்கள் முழங்க திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானமும் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here