ஒன்றரை ஆண்டு ஊதியமில்லை கண்ணில் கருப்புத் துணி கட்டி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

0
1236

தேனி மாவட்டம் கோட்டூர் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 19 மாத சம்பளம் வழங்கப்படவில்லை
இதுகுறித்து, தமிழக முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர் உயர்கல்வித்துறை செயலாளர் கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் கல்லூரி முதல்வர் உள்ளிட்டவர்களிடம் பலமுறை மனு அளித்து வந்தனர்

கல்லூரியில் கடந்த அதிமுக ஆட்சியில் பணியாற்றிய முன்னாள் கல்லூரி முதல்வர் சுப்புராஜ் அதற்கு அடுத்து வந்த கல்லூரி முதல்வர் செல்வராஜ் உள்ளிட்டவர்கள் கல்லூரியில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்கள் அரசு மூன்று ஆண்டுகாலம் கால அவகாசம் வழங்கி
தகுதியை வளர்த்துக்கொள்ள அரசு அறிவித்துள்ள சலுகையை மறைத்து விட்டனர்
இதனால், கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும்
என்று அறிவித்துவிட்டனர்

தற்போது பணியாற்றும் கல்லூரி முதல்வர் சுல்தான், உரிய அனுமதி பெற்றால் மட்டுமே கல்லூரியில் பணியாற்ற அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, கோட்டூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றிய ஆசிரியர்க கண்ணில் கருப்பு துணி கட்டி 19 மாத சம்பளம் வழங்க கோரியும் ,மீண்டும்
கல்லூரியில் பணியாற்ற அனுமதி வழங்க கோரியும் மதுரையில் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here