மதுரையில் மெகா ரெய்டு: 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

0
458

.

மதுரையில் சமீப காலமாக லாரி மற்றும் சிறிய ரக சரக்கு வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தி வரப்படும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்திலிருந்து மதுரைக்கு சட்டத்திற்கு புறம்பாக லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, மதுரை சிந்தாமணி விரகனூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக அளவுக்கு அதிகமாக மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட காவல்துறையினர் ரேஷன் அரிசி கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். L சரக்கு லாரி ஓட்டுநரான சண்முக சுந்தரத்தை பிடித்த காவல்துறையினர் லாரியில் வைக்கப்பட்டிருந்த 300மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

மேலும் ரேஷன் அரிசியை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட சரக்கு லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் சண்முக சுந்தரத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here