மதுரை மதிச்சியம் ஆர்.ஆர். மண்டபத்தை சேர்ந்தவர் மகாதேவன்( 36). இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.அங்கு அதே பகுதியை சேர்ந்த தென்னரசு, மணி, அசோக்,அப்பு ஆகிய நால்வரும் வந்து சிகரெட்கேட்டனர் .இதற்குமகாதேவன் பணம் கேட்டிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்தவர்கள், கல் மற்றும் உருட்டுக்கட்டையால் மகாதேவனை தாக்கி விட்டு ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மதிச்சியம்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.














