நெல்லை மாநகர பகுதியில் கொரனா நோய்த் தொற்றைத் தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிரடி கொரனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது .நெல்லை மேலப்பாளையம் உழவர் சந்தையில் நடத்தப்பட்ட கொரனா பரிசோதனை முகாமில் வியாபாரிகள் உள்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் உழவர் சந்தை மூடி சீல் வைக்கப்பட்டது.
மாநகராட்சி ஊழியர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.









