காஞ்சியில் இதுவரை 100க்கு மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்

0
1202

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இன்று (மே.24) முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலையான மூங்கில் மண்டபம் சந்திப்பில் காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி, தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர். 

சோதனையின் போது, உரிய அனுமதி பெறாமல் சாலைகளில் சுற்றித்திருந்த 100க்கும் மேற்பட்டோரின் இருசக்கர வாகனங்களை துணை காவல் கண்காணிப்பாளர்.மணிமேகலை தலைமையிலான காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here