மாநகராட்சி அலுவலர்களாக நடித்து நகை கொள்ளை

0
317


கோவை குனியமுத்தூர் செல்வம் நகர் பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவரின் மனைவி உமாமகேஸ்வரி( 65 ).இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த 2 மர்ம நபர்கள் கோவை மாநகராட்சியில் இருந்து வருவதாகவும் வீட்டை அளவீடு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

இதுகுறித்து ஏற்கனவே தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறியிருக்கின்றனர். இதை நம்பிய உமாமகேஸ்வரி  அவர்களை வீட்டை அளவீடு செய்ய அனுமதித்தார். இதையடுத்து அவர்கள் வீட்டில் அளவீடு செய்வது போல டேப்பை வைத்து அளந்து கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அதன்பிறகு உமாமகேஸ்வரி வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த வைரக்கற்கள் பதித்த 2 தங்க வளையல்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. ஐந்தரை சவரன் எடையுள்ள சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடு போனது குறித்து குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் உமா மகேஸ்வரி புகார் அளித்தார்.

புகாரின்பேரில் போலீசார் மாநகராட்சி ஊழியர்கள் என்று கூறி வீட்டிற்குள் புகுந்து நகை திருடிய 35 வயது மதிக்கத்தக்க இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here