தமிழகம் முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக ஏ1 என்பது உள்பட 4 வகைகளில் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.
அதன்படி குமரி மாவட்டம் தென் தாமரை குளம் அருகே உள்ள கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி தூத்துக்குடி செல்வம் என்பவரையும் போலீசார் தேடி வந்தனர். அவன் மீது 6 கொலை உள்ளிட்ட 27 வழக்குகள் உள்ளன. குமரி மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் பட்டியலிலும் அவர் உள்ளான். இதனால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று ரவுடி தூத்துக்குடி செல்வத்தை கன்னியாகுமரி போலீசார் சுட்டு பிடித்தனர். தொடர்ந்து போலீசார் தாக்குதலில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.