கோவை மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால், மருத்துவமனைகளிலும், சிறப்பு மையங்களிலும் காலி படுக்கைகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன.
மேலும், சூலுாா், தொண்டாமுத்துாா், மதுக்கரை, காரமடை, பெ.நா.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், பாதிப்பு அதிகமாக இருந்ததால், இங்கு ஏற்கெனவே வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தப் பகுதிகளில் தவிர ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில், வீட்டு தனிமைப்படுத்துதலால் தொற்று பரவல் ஏற்படுவதாக சுகாதாரத் துறைக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, இனி வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு, அனுமதி இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.













