கோவில்பட்டி – எட்டயபுரம் மெயின் ரோட்டில் கோவில்பட்டி யூனியன் அலுவலகம் அமைந்துள்ளது. 24 மணி நேரமும் இந்த சாலையில் ஆட்கள் மற்றும் வாகன நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். யூனியன் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் பணிமுடிந்ததும் ஊழியர்கள் வழக்கம்போல் அலுவலகத்தை பூட்டி விட்டுச் சென்றனர்.
நேற்று திரும்பி வந்த போது அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தியிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
நள்ளிரவில் யாரோ மர்மநபர்கள் புகுந்து அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதியில் பதிவாகி உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.









