ஹெல்மட் போடாத பஸ் டிரைவருக்கு ரூ.500 அபராதம்: உரிமையாளர் அதிர்ச்சி

0
570

நொய்டாவில் சுமார் 40 முதல் 50 பேருந்துகளை வைத்து தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருபவர் நிரங்கர் சிங். இவருக்கு சொந்தமான பேருந்தின் ஓட்டுநர் ஒருவர் தலைக்கவசம் அணியாமல் பேருந்தை இயக்கியதாக கூறி, நிரங்கர் சிங்குக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து ஆன்லைன் மூலம் ரசீது அனுப்பப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11ம் தேதியிடப்பட்ட ஆன்லைன் ரசீதை, தனது ஊழியர் மூலம் நிரங்கர் சிங் உறுதி செய்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தேவை ஏற்பட்டால் தனக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here