ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம் நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்- 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
சந்திரயான் -2 கடந்த புதன்கிழமையன்று பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் துவங்கி ஆகஸ்ட் 20-ல் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது.
அதன்பின் சுற்று வட்டப் பாதையின் விட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ள நிலையில், நிலவின் சுற்று வட்டப் பாதையில் சுற்றி வரும் சந்திராயன் 2, சுமார் 2,650 கி.மீட்டர் தொலைவில் இருந்து நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.














