தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் ஒரே பெயரில் அறிவிக்க கோரி தொடர்ந்து போராட்டம் நடந்துவருகிறது. இதற்காக நாங்குநேரி இடைத்தேர்தலையும் அச்சமூகத்தினர் புறக்கணித்தனர்.
இந்நிலையில், அந்த கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட கண்மணி மாவீரன், நெல்லையப்பம், சண்முக சுதாகர் ஆகியோர் முன்னிலையில் தமமுமவினர் திரண்டுவந்தனர். அவர்களை தமிழ்நாடு சுற்றுலா விடுதிக்கு முன்பே இரும்பு அரணிட்டு காவல்துறையினர் தடுத்தனர். தடுப்பை தள்ளிவிட்டு முன்னேறிய தமமுகவினருக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆட்சியர் வளாக வாசல் வரை அனைவரையும் அனுமதித்து, சிலரை மட்டும் மனு அளிக்க அனுமதிக்க உடன்பாடானது. அவ்வாறே மனு அளித்துவிட்டு கலைந்துசென்றனர்.









