அதிமுக பத்திரிகை நிர்வாகி பெயரை கூறி பெண்ணை மிரட்டியவர் கைது

0
344

கோவையில் அதிமுக பத்திரிகையான ’நமது அம்மா’ நாளிதழின் வெளியீட்டாளரான வடவள்ளி சந்திரசேகரின் பினாமி என்று கூறி பெண்ணை மிரட்டிய நபர் கைது செய்துசிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை வடவள்ளி மகாராணி அவென்யூ பகுதியை சேர்ந்த சாண்டி வில்லியம்ஸ் மனைவி பிங்கி (40 ). இவர் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் பொது வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஹாலோபிளாக் சுந்தரம் என்பவர் மறித்து கட்டுமான பணிகள் செய்ய முயற்சி செய்தார் .மேலும் அங்கிருந்த பைப்புகளை அடித்து உடைத்தார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் பிங்கியின் கணவர் சாண்டி வில்லியம் வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில்  விசாரணை நடத்தியபோது ஹாலோ பிளாக் சுந்தரம் இனிமேல் இடையூறு செய்ய மாட்டேன் என்று கூறி உறுதியளித்ததை தொடர்ந்து புகார் மனுவை வாபஸ் பெற்றனர். இந்நிலையில் மீண்டும் கடந்த சில மாதங்களாக ஹாலோ பிளாக் சுந்தரம் , பிங்கி மற்றும் அவரது குடும்பத்தார் இடையே தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால்  பிங்கியின்  கணவர் சாண்டி வில்லியம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி இடத்தை பார்வையிடுவதற்கு நீதிமன்ற ஆணையர் நேரில் வந்து ஆய்வு செய்து சென்றார். இதைத்தொடர்ந்து நேற்று வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற இருந்தது.

அந்த சமயத்தில் நான்கு அடியாட்களுடன் அங்கு வந்த ஹாலோ பிளாக் சுந்தரம், ‘ நான் யார் என்று தெரியுமா?  வடவள்ளி சந்திரசேகரின் பினாமி’ என்று மிரட்டி தகராறில் ஈடுபட்டார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார்.இதனால் பயந்துபோன பிங்கி உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு மையத்திறகு தொடர்பு கொண்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசை கண்டதும் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தப்பிச் சென்ற நபர்களை வடவள்ளி போலீசார் தேடி வந்தனர். பின்னர் நேற்று மாலை வடவள்ளி பகுதியில் பதுங்கியிருந்த ஹாலோபிளாக் சுந்தரத்தை வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here