தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்த நிலையில் மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் பல்வேறு வழிகளில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள நத்தம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அந்த பகுதியில் உள்ள களிமண்ணைக் கொண்டு பொம்மைகள் செய்து தங்களுடைய திறமைகளை வெளிப்படுததுகின்றனர்

மாணவர்கள் விடுமுறை நாட்களில் பொழுதைப் போக்குவதற்காக ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டு வருவதால் வமன உளைச்சலுக்கு ஆளாகி வரும் இந்த சூழ்நிலையில், நல்ல முறையில் தங்களுடைய நேரத்தைச் செலவிடும் இந்த மாணவர்களின் வேலை பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
பச்சைக் களிமண்ணாய் இருக்கும் மாணவர்களின் இளமனதை குழைத்து அழகிய சிலைகளாக வடிக்கும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும் இந்த நிலையில், களிமண்ணை கலையாகும் மாணவர்களின் செயல் களிப்பு தானே?