கடந்த 2015 அக்டோபர் 30ல் மானூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அழகியபாண்டிபுரத்தை சார்ந்த ராமர் என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டார். அதே ஊரை சேர்ந்த சேகர், பெரிய மாரியப்பன், சின்ன மாரியப்பன், இளையராஜா ஆகியோர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நெல்லை 4ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த், குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ.5,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.







