மதுரை மாவட்டத்தில் 250க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டுவருகின்றன. கடந்த திங்கள் முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மது விற்பனையானது அதிகளவில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் சத்திரபட்டி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மதுப்பிரியர் ஒருவர் வாங்கிய 3 மதுபாட்டில்களில் முழுவதிலுமாக துசியாகவும், சிறிய சிறிய பூச்சிகளும் மிதந்துள்ளன. இது குறித்து மதுபான கடை பணியாளர்களிடம் கேட்டபோதும் உரிய விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து அரசு டாஸ்மாக் கடைகளில் போலியான மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், விற்பனை செய்யகூடிய மதுபாட்டில்களில் தூசிகள் இருப்பதாகவும், பூச்சிகள் இருப்பதாகவும் கூறி சமுக ஆர்வலர் ரஞ்சித்குமார் என்பவர் மதுரை மாவட்ட கலால்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதேபோன்று பல்வேறு மதுபானகடைகளிலும் போலியான மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.













